நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்காது எனது தெரிவித்துள்ளது.

இதேவேளை, மலையக  மக்கள் சார்ந்த 32 கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பவருக்கே ஜனாதிபதி தேர்லில் தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மேலும் தெரிவித்துள்ளது.

கொழும்பு 7 இல் அமைந்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியமூர்த்தி பவனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.