தனது காணியை மக்களிடம் பகிர்ந்தளிக்க வீ.ஆனந்தசங்கரி  அரசாங்க அதிபரிடம் ஆவணம் கையளிப்பு

Published By: Digital Desk 4

23 Sep, 2019 | 03:59 PM
image

சுதந்திரபுரம் பகுதியில் உள்ள தனது காணியை மக்களிடம் பகிர்ந்தளிக்க வீ.ஆனந்தசங்கரி உத்தியோகபூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஆவணத்தை கையளித்தார்.  இன்று பகல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆனந்தசங்கரி குறித்த காணியை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரினிடம் கையளித்தார்.

இதன்போது முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். அப்பகுதியில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் குடும்பங்கள் மற்றம் காணி அற்றவர்களிற்கு குறித்த காணியை பகிர்ந்தளிக்குமாறு தெரிவித்து இன்று காணி தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலான ஆவணத்தினை ஆனந்தசங்கரி கையளித்திருந்தார்.

குறித்த செயற்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் ஆனந்தசங்கரியிடம் வினவியபோது,

என்னிடம் இருந்த காணியை மக்களிடம் பகிர்ந்தளிக்குமாறு தெரிவித்து அரச அதிபரிடம் உத்தியோகபூர்வமாக கடிதம் ஒன்றை கையளித்துள்ளேன். இதன்படி அரச அதிகாரிகள் காணியை பகிர்ந்தளிப்பார்கள். அதில் எவ்வித தலையீடும் நான் செய்யப்புாவதில்லை. அவர்கள் நேர்மையாக அதனை பகிர்ந்தளிப்பார்கள் என்பதில் நம்பிக்கை எனக்கு உள்ளது. இதனை முன்னுதாரணமாகக்கொண்டு, அதிகளவில் காணிகளை வைத்திருப்பவர்கள் காணியற்ற மக்களிற்கு பகிர்நதளிக்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள காணியை பார்வையிட்ட ஆனந்தசங்கரி, அங்கு வாழும் மக்களுடன் கலந்துரையாடியதுடன், காணி வழங்கல் தொடர்பில் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலான ஆவணம் ஒன்றினை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மக்களிடம் தெரிவித்தார்.

 குறித்த செயற்பாடு தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவு்ம, காணி அற்று வாழும் தமக்கு காணிகளை வழங்கியமைக்காக நன்றி தெரிவிப்பதாகவும் மக்கள் ஆனந்தசங்கரிக்க நன்றி தெரிவித்தனர்.55

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர்...

2025-02-14 16:59:55
news-image

இன்றைய வானிலை

2025-02-15 06:03:24
news-image

வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் படுகாயமடைந்த இளம்...

2025-02-15 02:04:47
news-image

வவுனியாவில் ஆக்கிரமிக்கப்படும் விவசாய நிலங்கள்: கமநல...

2025-02-15 02:00:56
news-image

வடக்கு இளையோருக்கு வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை...

2025-02-15 01:57:24
news-image

2025 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச்...

2025-02-15 01:50:41
news-image

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிரான வழக்கு:...

2025-02-15 01:44:21
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00