சட்டத்தின் பிறப்பிடம் குறித்து சந்தேகம்  ஏற்பட்டுள்ளது : ஜி. எல். பீறிஸ் 

Published By: R. Kalaichelvan

23 Sep, 2019 | 03:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து சொலிஸ்டர் ஜெனரால் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க உடனடியான வெளியேற்றப்பட வேண்டும்.

 

சட்டத்தை தன்னால் இயற்றவும், முடியும் தேவைக்கேற்ப மீறவும் முடிம் என்று இவர் குறிப்பிட்டுள்ள கருத்து சட்டத்தின் பிறப்பிடம் எது  என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என பொதுஜன பெரமுனவின்  தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின்தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றி உறுதி என்பதை ஆளும் தரப்பினர் தற்போது நன்கு உணர்ந்துள்ளார்கள். 

ஜனநாயக ரீதியில் போட்டியிட முடியாதவர்கள் முறைக்கேடான விதத்தில் செயற்பட்டு தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிப்பது பல விடயங்களின் ஊடாக வெளிப்பிட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ  எதிரணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளமையினை அறிந்தவுடன் அரசாங்கம்  ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சித்தது. அது தோல்வியில் முடிந்தவுடன்   நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினையும் முழுமையாக இரத்து செய்ய முயற்சித்து அது தற்போதைய அரசியல் பேசுப்பொருளாகவும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்