சிறை பிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் ஸ்டெனா இம்பெரோவை ஈரான் அரசாங்கம் விடுவித்துள்ளது.

'ஸ்டெனா இம்பெரோ' என்ற இங்கிலாந்து கப்பலை ஈரான் கடற்படை கடந்த ஜூலை மாதம் சிறை பிடித்தது. 

அந்தக் கப்பலில் இருந்த படைத் தளபதி மற்றும் ஊழியர்கள் மீது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர்களை விடுவிக்கத் தயாராக இருப்பதாகக் கூறி அவர்களை விடுவிப்பதாகவும் ஆனால் சட்டவிதிகளை மீறியதால் கப்பல் மட்டும் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்தது.

இந்நிலையில் சிறைபிடிக்கப்பட்ட கப்பல் நேற்று விடுவிக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 19 ஆம் திகதி இங்கிலாந்து நாட்டுக் கொடியுடன் சவுதிக்கு ஹார்முஸ் ஜலசந்தி பகுதியைக் கடந்து சென்று கொண்டிருந்த ‘ஸ்டெனா இம்பெரோ' என்ற எண்ணெய்க் கப்பலை ஈரான் அரசாங்கம் சிறை பிடித்தமை குறிப்பிடத்தக்கது.