நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையையடுத்து பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு மீனவர்களை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு நாட்டில் அதிகளவில் மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் ஆறுகளின் அருகில் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக செயல்படுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், களுத்துறை, கேகாலை, காலி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.