தனது காத­லி­யிடம் அவரை திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை நீரின் கீழ் நீச்­ச­ல­டித்­த­வாறு விநோ­த­மான முறையில்  தெரி­விக்க முயன்ற  காதலர் ஒருவர் நீரில் மூழ்கி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் தான்­சா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது. தான்­சா­னி­யாவின் பெம்பா தீவுக்கு அப்­பா­லுள்ள மன்டா வாசஸ்­த­லத்­திற்கு விடு­மு­றையைக் கழிக்க  தனது காத­லி­யான கெனேஸா அன்­டோ­யி­னி­யுடன் சென்ற அமெ­ரிக்­க­ரான ஸ்டீபன் வெப்­பரே இவ்­வாறு நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்ளார்.


 கடந்த வியா­ழக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற இந்த சம்­பவம் தொடர்­பான தக­வல்கள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யா­கி­யுள்­ள­ன.

மேற்­படி  விடு­முறை வாசஸ்­த­லத்­திற்கு தனது காதலி­யுடன் வந்த ஸ்டீவன் அந்த வாசஸ்­த­லத்­தி­லி­ருந்த கடல் நீருக்கு கீழான கண்­ணாடி அறையை நான்கு இர­வு­க­ளுக்கு வாட­கைக்கு எடுத்­துள்ளார்.

கடற்­க­ரை­யி­லி­ருந்து சுமார் 820 அடி தூரத்தில்  கடல் மட்­டத்­தி­லி­ருந்து 32 அடி ஆழத்தில் அமைந்த அந்த  காற்­றோட்ட வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்ட  கண்­ணாடி அறையில் தங்­கி­ய­வாறு கடலின் உட்­புற அழ­கையும் மீன் கூட்­டங்­க­ளையும் கண்­டு­க­ளிக்க முடியும் என்­பது குறிப்­பி­டத்­ தக்­கது.

இந்­நி­லையில்  தனது திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை விநோ­த­மான முறையில் வெளியிட முயன்ற ஸ்டீவன் கடலில் குதித்து நீருக்கு கீழான அறையின் கண்­ணாடிப் பகுதி மீது தனது திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை உள்­ள­டக்­கிய கடி­தத்தை அழுத்திப் பிடித்து அதி­லுள்ள வாச­கங்­களை வாசிக்க காத­லியை பணித்த பின்னர் திரு­மண மோதி­ரத்தை காண்­பித்­துள்ளார்.

இதன்­போதே அவர்  காத­லியின் முன்­பாக நீரில் மூழ்கி உயி­ரி­ழந்­துள்ளார்.

ஸ்டீவன் தனது திரு­மண விருப்­பத்தை  வெளியிட எழு­திய கடி­தத்தில்,  "நான்  உன்­னிடம் கொண்­டுள்ள காதல் தொடர்பில் அனைத்­தையும் சொல்­லு­ம­ள­விற்கு என்னால் எனது மூச்சை பிடித்துக் கொண்­டி­ருக்க முடி­ய­வில்லை. நான் உன்னை நேசிக்­கிறேன். நான் ஒவ்­வொரு நாளும் உன்னை மேலும் மேலும் நேசிக்­கிறேன்" என  எழு­தி­யி­ருந்தார்.

 தனது காதலர்  நீரின் கீழி­ருந்­த­வாறு திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை வெளி­யிடும்  காணொளிக் காட்­சியை  பேஸ்புக் இணை­யத்­த­ளத்தில் வெளி­யிட்­டுள்ள காத­லி­யான கெனேஸா, தான் தனது காதலருக்கு "ஆம்.. ஆம்,.." என மில்லியன்கணக்கான தடவைகள் தனது சம்மதத்தை வெளியிட தயாராகவுள்ள போதும்  அதனைச் செவி மடுக்க அவர் உயிருடன் இல்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.