இலங்கையிலிருந்து 4 கோடி ரூபா தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்ற நபர்கள் தமிழகத்தில் கைது!

Published By: R. Kalaichelvan

23 Sep, 2019 | 11:31 AM
image

இலங்கையில் இருந்து மண்டபம் அருகே வேதாளை பகுதிக்கு நேற்று காலை தங்கம் கடத்தப்படுவதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் வளைக்குடா கடற்பகுதியின் சுங்க அதிகாரிகள் , மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு , கடலோர காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள்  தீவிர தேடலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் வேதாளைப்பகுதிக்கு 7 கிலோ கிராம் தங்கத்தை காரில் கடத்திக்கொண்டு சென்ற நபர்களை அதிகாரிகள் துரத்திச்சென்று திருப்புவனம் அருகே வைத்து கைது செய்தனர்.

அத்தோடு கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 4 கோடி ரூபா பெறுமதியான 7 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்தோடு இவ்வாறு கடத்தலில் ஈடுபட்ட மதுரை மற்றும் சென்னையை சேர்ந்த நபர்களை மதுரையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், தீவிர விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

குறித்த விசாரணையின் போது தெரியவந்துள்ளதாவது, இலங்கையில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக தமிழகத்திற்கு தங்கத்தை கடத்தி சென்றுள்ளமையானது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

அத்தோடு கடந்த 2017, 2018 ஆம் ஆண்டுகளில்,  குறித்த எல்லை வழியாக பாரியளவுத் தொகை தங்கம் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33