தென்னாபிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ரி20 போட்டியில் ரிசப் பன்ட் ஸ்ரேயாஸ் ஐயரிற்கு முன்னதாக களமிறக்கப்பட்டதில் தவறு நிகழ்ந்துள்ளது என இந்திய அணி தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

ரிசப் பன்ட் நான்காவது வீரரா துடுப்பெடுத்தாடுவதற்கு களமிறங்கியிருக்க கூடாது ஸ்ரேயாஸ்ஐயரே களமிறங்கியிருக்கவேண்டும் என தெரிவித்துள்ள விராட்கோலி இருவருக்கும் இடையில் இடம்பெற்ற தொடர்பாடலில் காணப்பட்ட தெளிவின்மையே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

முதல் பத்து ஓவர்களில் இந்தியா இரு விக்கெட்களை இழந்தால் ஸ்ரேயாஸ் ஐயரே நான்காவது வீரராக களமிறங்குவார் என முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்ததாக விராட்கோலி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்பாடலில் ஏதோ பிழை நிகழ்ந்துள்ளது என நினைக்கின்றேன்,இது பின்னர் உறுதியாகியுள்ளது துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் இருவருடனும் பேசியுள்ளார் அதன் போது யார் களமிறங்குவது என்பதில் தெளிவின்மை நிலவியது தெரியவந்துள்ளது என விராட்கோலி குறிப்பிட்டுள்ளார்.

சிகார் தவான் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இருவரும் துடுப்பெடுத்தாடுவதற்கு களத்தில் இறங்க முயன்றுள்ளனர், இருவரும் அவ்வாறு ஆடு களத்தினுள் நுழைந்திருந்தால் அதுவேடிக்கையானதாக காணப்பட்டிருக்கும் மூன்று துடுப்பாட்ட வீரர்கள் ஆடுகளத்தில் காணப்பட்டிருப்பார்கள் என கோலி தெரிவித்துள்ளார்.

ர்pசாப்பண்ட் எத்தனையாவது  ஆட்டக்காரராக களமிறங்கவேண்டும் என்பது குறித்து சர்ச்சை காணப்படும் நிலையிலேயே இவ்வாறான குழப்பநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.