சுமார் 28 அரச தொழிற்சங்க ஊழியர்கள் இன்று முன்னெடுத்துள்ள சுகயீன விடுமுறை போராட்டம் காரணமாக கடவுச்சீட்டு, அடையாள அட்டை மற்றும் பொதுச் சேவை உள்ளிட்ட ஒருநாள் சேவைகள் பாதிப்படைந்துள்ளது.

இந்த சம்பவத்தினால் இன்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருகை தந்த பொது மக்களுக்கு உரிய சேவையினை பெற்றுக் கொள்ள முடியாததன் காரணமாக பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். 

குறித்த சேவையை பெற்றுக் கொள்ள நீண்ட தூரத்திலிருந்து வந்தவர்கள் உட்பட ஏனையோர் கோபமடைந்தமையினால் அப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமையும் உருவானது.

இதனால் பத்தரமுல்லை சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதும் குறிப்பிடுத்தக்கது