களுத்துறை பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையின் மாணவி ஒருவரையும் அவரது தாயாரையும் கடத்தி கப்பம் பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை நாகொடை பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் மாணவியும் அவரது தாயாருமே இவ்வாறு கடத்தப்பட்டனர்.

இதையடுத்து குறித்த இருவரையும் கடத்திய இரு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.,