ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, குமார வெல்கம, மனோஜ் சிறிசேன மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.