மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியிலிருந்து 3 கடினபந்து வீரர்கள் மாவட்ட மட்டத்திற்குத் தெரிவு

Published By: Digital Desk 4

22 Sep, 2019 | 07:15 PM
image

மஸ்கெலியா சென்.ஜோசப் கல்லூரியில்  2017 ஆண்டில் கடினப்பந்து கிரிகெட் அணி ஆரம்பிக்கப்பட்டது.அவ்வாண்டிலேயே முதன்முறையாக இப்பாடசாலையில் 11 வயதிற்குட்பட்ட மாணவர் கடின பந்து அணியும் பதிமூன்று வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கான கடின பந்து அணியும் ஆரம்பிக்கப்பட்டது. 

2018ஆம் ஆண்டில் இப்பாடசாலை கடின பந்து கிரிகெட் அணியில் பதினைந்து வயதிற்குட்பட்ட மாணவர் அணியும் ஆரம்பிக்கப்பட்டதுடன் 13 வயதிற்குட்பட்ட மாணவர் அணி முதன்முறையாக நுவரெலியா மாவட்ட மட்டப்போட்டிக்கான பயிற்சி போட்டியில் பங்கு பற்றியமை விசேட அம்சமாகும்.

அத்துடன் இவ்வாண்டு பதினைந்து வயதிற்குட்பட்ட கடினபந்து மாணவர்கள் அணி நுவரெலியா மாவட்ட போட்டியில் பங்கு பற்றியுள்ளதுடன் அப்போட்டியில்  மூன்றாம் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வணியிலிருந்து மூன்று வீரர்களான வேகப்பந்து வீச்சாளர் லிரோசன்,சுழல் பந்துவீச்சாளர் ரோகித் சிறிநாத் மற்றும் துடுப்பாட்ட வீரர் கவிஸ் பிரின்ஸ்டன் ஆகிய வீரர்களை நுவரெலியா மாவட்ட அணிக்குத் தெரிவாகியுள்ளனர்.

இது தொடர்பாக அவ்வணியைப் பயிற்றுவித்த ஆசிரியர் மோகன்ராஜ் கூறுகையில்,இப்பாடசாலையில் சிறந்த கிரிகெட் வீரர்கள் உள்ளனர். அவ்வாறு இனங்காணப்பட்ட பதினைந்து வயதிற்குட்பட்ட கடினப்பந்து அணியிலிருந்து மூவரை நுரெலியா மாவட்ட அணிக்குத் தெரிவாகியுள்ளமை எனக்கும் எமது பாடசாலைக்கும் பெருமையாகும்.

இவ்வணியை உருவாக்குவதற்கு உதவியளித்த கல்வி அமைச்சு, இலங்கை கடின பந்து சம்மேளனம், நற்குண முன்னேற்ற அமைப்பு, பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் பழைய மாணவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22