வட மாகாணத்தில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக வீதிப்பாதுகாப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை இந்த வீதிப் பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.இப்பாதுகாப்பு வாரத்தில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டங்கள் பல மேற்கொள்ளப்படவுள்ளதோடு, வட மாகாண ஆளுநர் செயலகம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பான அறிவூட்டும் வேலைத்திட்டங்களுக்கு மேலதிகமாக பாடசாலை மாணவர்களிடையே போக்குவரத்துப் பிரிவை ஸ்தாபிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளமை முக்கிய அம்சமாகும்.