அமைச்­சர்­க­ளான சஜித் பிரே­ம­தாஸ, அகி­ல­விராஜ் காரி­ய­வசம், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டி.எம்.சுவா­மி­நாதன் ஆகியோர் நாளை  திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் முன்­னி­லை­யாக உள்­ளனர்.

இதே­வேளை கடந்த 3 வரு­டங்­க­ளாக வீட­மைப்பு அதி­கார சபையின் அனு­ம­தி­யின்றி, குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யி­லான பணி­யா­ளர்­க­ளுக்கு மேல­தி­க­மாக ஆட்­சேர்ப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டமை தொடர்பில் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­விடம் வாக்­கு­மூலம் பதிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக ஆணைக்­குழு தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன.

பாட­சாலை மாண­வர்­க­ளுக்­கான சீரு­டைக்கு பதி­லாக, வவுச்­சர்­களை வழங்­குதல் மற்றும் டெப் கணி­னி­களை வழங்­கு­வதில் இடம்­பெற்ற மோச­டிகள் தொடர்­பான முறைப்­பாட்­டுக்கு அமைய, கல்வி அமைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வ­சத்­திடம் வாக்­கு­மூலம் பெறப்­ப­ட­வுள்­ளது.

சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்­ச­ராக பதவி வகித்த காலப்­ப­கு­தியில், இடம்­பெற்ற சம்­பவம் ஒன்று தொடர்­பான முறைப்­பாட்­டுக்கு அமைய, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டி.எம்.சுவா­மி­நா­த­னிடம் வாக்­கு­மூலம் பெறப்­பட வுள்­ள­தா­கவும் ஆணைக்­குழு தக­வல்கள் மேலும் தெரி­வித்­துள்­ளன. 

2015 முதல் 2018 வரை­யான காலப்­ப­கு­தியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.