எம்.மனோ­சித்ரா

பொது­ஜன பெர­முன கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வரியில் நடை­பெற்ற உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் பெற்ற வெற்­றியைக் கொண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் வெற்றி பெறுவோம் என்று எண்ணக் கூடாது எனத் தெரி­வித்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன , ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஆத­ர­வின்றி எந்த கட்­சிக்கும் வெற்றி பெற­மு­டி­யாது. சுதந்­திரக் கட்­சியே அடுத்த ஜனா­தி­ப­தியைத் தீர்­மா­னிக்கும் என்றும் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் மாவட்ட ரீதி­யி­லான மாநாடு நேற்று சனிக்­கி­ழமை மாத்­தளை - நாவுல நாலந்த மைதா­னத்தில் இடம்­பெற்­றது. இம் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய ஜனா­தி­பதி கூறி­ய­தா­வது :

கடந்த 2018 பெப்­ர­வரி உள்­ளூ­ராட்சி தேர்­தலின் போது வாக்­க­ளர்கள் வேட்­பாளர் யார் என்­பது பற்றி சிந்­திக்­க­வில்லை. மாறாக மத்­திய வங்கி மோச­டிக்­கார்­க­ளுக்கும் அர­சாங்­கத்­திற்கும் எதி­ராக வாக்­க­ளித்தால் போதும் என்ற மன­நி­லை­யி­லேயே  இருந்­தனர். ஆனால் ஜனா­தி­பதித் தேர்­தலில் வாக்­காளர் யார் என்றும், அவ­ரது வேலைத்­திட்­டங்கள் என்ன என்­பது பற்­றியும் மக்கள் சிந்­திக்­கின்­றனர். எனவே பொது­ஜன பெர­முன வெற்றி பெற்று விடுவோம் என்ற மம­தையில் இருந்து விடக் கூடாது.

அத்­தோடு தற்­போ­துள்ள நிலை­வ­ரத்தின் படி எந்­த­வொரு வேட்­பா­ள­ருக்கும் 40 வீதத்தை விட அதிக வாக்­குகள் கிடை­யாது. எனவே நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் சக்தி ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­டமே இருக்­கி­றது என்­பதை அனை­வரும் புரிந்து கொள்ள வேண்டும்.

2015 ஆம் ஆண்டு மக்கள் ஜன­நா­ய­கத்தை மாத்­தி­ரமே எதிர்­பார்த்து எனக்கு வாக்­க­ளித்து என்னை வெற்றி பெறச் செய்­தார்கள். அதனை நான் நிறை­வேற்­றி­யுள்ளேன். நாம் இவ்­வாறு சென்று கொண்­டி­ருக்­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தவ­றான அர­சியல் பாதையில் செல்ல முற்­பட்டார். அதன் பய­னா­கவே 2015 க்கு முன்­னரை விடவும் அதற்கு பின்னர் மிகப் பெரிய ஊழல் மோச­டி­யான மத்­திய வங்கி மோசடி இடம்­பெற்­றது.

அத­னா­லேயே நாம் தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலக வேண்­டி­யேற்­பட்­டது. ஆனால் இவ்­வா­றான பிர­தான கட்­சிகள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் காணப்படுகின்ற எவ்வித குற்றச்சாட்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மீது கிடையாது. சுதந்திர கட்சியின் எதிர்காலத்தில் நாட்டின் எதிர்காலம் தங்கியிருக்கிறது என்றார்.