மக்கள் விரும்பினால்   தேர்தலில் போட்டியிடுவேன் என இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் பதவிநீக்கம் செய்யப்பட்ட சிராணி பண்டாரநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என ஊகங்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் என்ன விரும்புகின்றார்கள் என்பதே நான் தேர்தலில் போட்டியிடுவதை தீர்மானிக்கும்,இதுவரை நடந்தது எதுவும் திட்டமிட்டு நடந்ததில்லை மக்கள் ஆணையே முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விதி என்னை இவ்வளவு தூரத்திற்கு கொண்டுவந்துள்ளது விதி அனைத்தையும் தீர்மானிக்கும் என நான் நம்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் பல பதவிகளை வகித்துள்ளேன் அவ்வேளையில் மக்களிற்கு நீதி வழங்க முயன்றுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு முறை மக்களிற்கு பணியாற்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் மக்களிற்கு நீதி வழங்குவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடும் மக்களுமே  முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் பிரதமநீதியரசர் தனது வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் நூலை கொழும்பில் இடம்பெறும் புத்தக கண்காட்சியில் வெளியிட்டுள்ளார்.

2013 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் நான் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விடயங்களே இந்த நூலில் இடம்பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.