இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளில் தலையிட்ட அமைச்சர்கள் யார் என்பதை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் டில்ருக்சி விக்கிரமசிங்க பகிரங்கப்படுத்தவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கும் அவன்ட் கார்ட் தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் என வெளியாகியுள்ள தொலைபேசி உரையாடல் பதிவுகள் இலங்கை அரசியலில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே சிறிசேன இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

குறிப்பிட்ட தொலைபேசி உரையாடல் பதிவு  பல கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டில்ருக்சி விக்கிரமசிங்கவின் காலத்தில் இடம்பெற்ற விசாரணைகள் அரசியல்மயப்படுத்தப்பட்டன என்பதே தனது கரிசனை எனவும்  சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது பணியில் செல்வாக்கு செலுத்திய அமைச்சர்களின் பெயர்களை வெளியிடுமாறும் டில்ருக்சி விக்கிரமசிங்கவிற்கு சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.