கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை ஒரே நாளில் யாழ்ப்பாணத்தில் கடும் மழை பெய்தது. வெங்காயம் அறுவடை நேரத்தில் அதிக மழை பொழிந்ததால் அதிகம் பாதிக்கப்பட்டது  வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் தான். படகில் செல்வதால் இது மீன்பிடிக்கும் காட்சி என்று நினைத்து விடாதீர்கள்.

வடமராட்சி கிழக்கில் தாழ்நிலங்களில் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளது வெங்காயம் அறுவடைக்கு தயாரான நிலையில் நீரில் மூழ்கியுள்ளது.

தண்ணீரில் வெங்காயம் மூழ்கியுள்ளதால் அழுகும் வாய்ப்பு அதிகம் என்பதால் விவசாயிகள் சிறுபடகில் அறுவடை செய்து கரைக்கு கொண்டுவருகின்றனர்.