(ஜெயந்தி)

ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை. வயோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகின்றது. இதற்குப் பலவாறு மருந்துகளும் பூச்சுகளும் அறிமுகப்படுத்தப்பட்ட போதும். இது இன்னமும் ஆண்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை தரவில்லை என்றுதான் கூறு வேண்டும். 

The hat contains a built-in patch which sends electric pulses to the scalp when triggered by motion, promoting natural hair growth chemicals in the skin

புதிய முயற்சியாக ஆண்கள் விரும்பி அணியும் தொப்பிகளில் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழுக்கைகளில் முடி வளர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். 

தானாக சிறியமின்கலன்கள் மூலம் மின்னை உற்பத்திசெய்து உச்சந்தலையில் ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொப்பி வழுக்கைத்தலையில் ஒரு மாதத்திற்குள் முடியை மீண்டும் வளரவைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

A prototype of the patch was tested on the lead researchers father

அத்துடன் சோதனைகள் மூலம் முடி உதிர்தலுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை விட இந்த தொப்பிகள் பக்க விளைவுகள் எதுவும் இன்றி சிறப்பாகச் செயற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தொப்பியின் உட்பகுதியில் இணையப்பட்டுள்ள  ஒரு மில்லி மீற்றர்  அகலமான மின் இயக்கி தூண்டப்படும்போது உச்சந்தலையில் மின்சார அதிர்வுகளை ஏற்படுத்தி சருமத்தில் இயற்கையான முடி வளர்ச்சி  ஹோமோன்களை ஊக்குவிக்கிறது. 

The rats' skin after being treated with the patch (pink box) and other baldness treatments

Images of mouse skin before treatment

மின்சார அதிர்வுகளை ஏற்படுத்தும் சாதனம் மென்மையாகவும் அணிபவர்களுக்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தொப்பிகளைப் பல ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதன் பின் உலகிலா விய ரீதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.