அல்பேனியாவின் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அல்பேனியாவின் தலைநகரான டிரானாவிற்கு மேற்கே 19 மைல் (30 கிலோமீட்டர்) தொலைவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நில நடுக்கம் காரணமாக உண்டான சேத விபரங்கள் எதுவும் இது வரை வெளியிடப்படவில்லை.