எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 திகதி இடம்பெறவுள்ள குறித்த தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகள் இன்று காலி மாவட்ட செயலகத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலின் அஞ்சல் வாக்குப் பதிவானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 04 ஆம் திகதி வாக்களிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.