ஜனாதிபதி தேர்தலானது எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை அஞ்சல் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல் ஆணையகத் தலவைர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 

மாவட் செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளை எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும்போது சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.