‘சங்கத்தமிழன்’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி, குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தானும் மாஸ் ஹீரோ தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.

சூர்யாவின் ரசிகர்கள் ‘காப்பான்’ படத்தை கொண்டாடி வரும் வேளை= தளபதியின் ரசிகர்கள் ‘பிகில்’ படத்தின் ஒடியோ வெளியீட்டைக் கொண்டாடி வரும் வேளை =சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தினை கொண்டாடிவரும் வேளை= தனுஷ் ரசிகர்கள் ‘அசுரன்’ படத்தை இணையத்தில் கொண்டாடி வரும் வேளையில், மக்கள் செல்வன் விஜயசேதுபதி ரசிகர்களும் ‘சங்கத்தமிழன்’ படத்தின் முன்னோட்டத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை செய்து கொண்டிருக்கிறது. அத்துடன் இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘எம் ஜி ராமச்சந்திரன்’ இதனை முன்னோட்டம் காண்பித்தவுடன் ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள். முன்னோட்டத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசும் பஞ்ச் வார்த்தைகள் அவரது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. அடுத்த மாதம் வெளியாக இருக்கும் ‘சங்க தமிழனை’ வரவேற்க உலகத் தமிழர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில், மாஸ் என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் ‘சங்கத்தமிழன்’ விஜயசேதுபதிக்கு ‘றெக்க ’படத்திற்கு பிறகு அமைந்திருக்கும் மாஸ் கொமர்ஷல் ஃபிலிம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் விஜயசேதுபதிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க, இவர்களுடன் நடிகர் சூரி, நாசர், அசுதோஷ் ராணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்,