வவுனியா தரணிக்குளம் கிராமத்தில் மரநடுகை விழா இன்று இடம் பெற்றது. 

தரணிக்குளத்தில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்ற சிறுவனின் மரம் நடுகையை ஊக்கிவிக்க வேண்டும் என்ற எண்ணக்கருவுக்கு வலுச்சேர்க்கும் முகமாகப் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் இத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களின் ஆதரவோடு இடம்பெற்ற இந்நிகழ்வில் மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டதோடு தரணி தீபம் விளையாட்டுக்கழத்திற்கான மைதானமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் டக்கிளஸ் தேவானந்தா மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் திலீபன் கட்சியின் ஆதரவாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கிராம  மக்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.