(நா.தனுஜா)

யுத்தகளத்தில் நின்று, அதனை வழிநடத்திய பீட்ல் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக தமிழ் மக்களால் வாக்களிக்க முடியுமெனின், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்து பாதுகாப்பு அமைச்சின் நிதி விவகாரங்கள் உள்ளடங்கலான விவகாரங்களைக் கையாண்ட கோத்தாபய ராஜபக்ஷவை ஏன் ஆதரிக்க முடியாது என்று லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,

தற்போது வீழ்ச்சி கண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க வேண்டிய நிர்பந்தமொன்று ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும் 29 ஆம் திகதி லேக்ஹவுஸிற்கு முன்பாக நாங்கள் ஏற்பாடு செய்யவிருக்கும் கூட்டத்தின் போது இதுகுறித்த யோசனை ஒன்றையும் நிறைவேற்றவிருக்கிறோம் என அவர் தெரிவித்தார்.