மரண தண்டனையும் அதை அணுகிய முறை மற்றும் அரசியலமைப்பு போன்றவை தொடர்பாக ஏனைய நாடுகள் எவ்வாறு நடந்துள்ளனவென நோக்கும் போது பூட்டான் ஒரு முக்கிய கவனத்திற்குரிய நாடாகும். ஒரு நீண்ட கால இடைநீக்கத்துக்குப் பின்பும், தேசிய சட்ட மன்றத்தில் பல விவாதங்கள் நிகழ்ந்த பின்பும் மரண தண்டனை அரசர் ஜிக்மே சிங்யே வாங்சுக்கின் அரச ஆணையினால் 2004 மார்ச் 20ஆம் திகதியில் கடைசியாக ஒழிக்கப்பட்டது. 

மேலும் 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரச யாப்பின் மூலமும் தடை செய்யப்பட்டது. பௌத்த ஆன்மீக விழுமியங்களுக்கு ஏற்ப செயற்பட வேண்டும் என்ற கரிசனை இதில் தெளிவாக புலப்படுகின்றது.

பூட்டானின் சனத்தொகையில் 75 வீதமானவர்கள் பௌத்தர்களாகவே உள்ளனர். அரச யாப்பின் 3(1) (ஆன்மீக பாரம்பரியம்)ஆம் பிரிவில்இ ‘பூட்டானின் ஆன்மீக பாரம்பரியம் சமாதானம்இ அஹிம்சைஇ இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை போன்ற விழுமியங்களை ஊக்குவிக்கின்ற பௌத்தமாகும்’ எனக்      கூறப்பட்டுள்ளது. 

மேலும்இ ‘பூட்டானில் அரிசியல் சமயத்திலிருந்து பிரிந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டிய அதே வேளையில் நாட்டின் ஆன்மீக பாரம்பரியத்தை பேணும் பொறுப்பு சமய நிறுவனங்களுக்கும் நபர்களுக்கும் உண்டு. சமய நிறுவனங்களும் நபர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்’ என்று யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அடிப்படைக் கடமைகள் 8(3)ஆம் பிரிவின் கீழ் ‘ஒரு பூட்டான் பிரஜை மதம்இ மொழிஇ பிரதேசம் மற்றும் பிரிவுகளை கடந்து எல்லா பூட்டான் மக்களிடையேயும் சகிப்புத்தன்மைஇ பரஸ்பர மரியாதை மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்க்க வேண்டும்’ எனவும் கூறப்பட்டுள்ளது.  

பூட்டானில் கடைசியாக 1964ஆம் ஆண்டில் தான் மரண தண்டனை நிறைவு செய்யப் பட்டதாயினும், தொடர்ச்சியாக சட்டப் புத்தகங்களில் மரண தண்டனை அடக்கப்பட்டிருந்தது. 1998ல் பல தடவை குற்றம் செய்த ஒருவரை, இவ்வகையான சந்தர்ப்பங்களில் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரச சட்ட மன்றத்தில் எழுப்பப் பட்ட போதிலும், நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை மட்டுமே வழங்கியிருந்தது கவனிக்கப்பட வேண்டியது. அந்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றம் பாரிய விமர்சனங்களுக்கு முகம் கொடுத்தது. 

ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதை விளக்கும் முகமாக, ‘“சட்டம் வெறுமனே அபராதங்களை வழங்குவதற்காக மட்டும் உள்ளதொன்றல்ல. ஒழுக்கமற்ற நபர்களை மனித மற்றும் சமூக அபிவிருத்தியை அடையும் வகையில் திருத்துவதும் புனர்வாழ்வு அளிப்பதுவும் நீதிமன்றத்தின் குறிக்கோள் ஆகும்” என்று ஒரு சட்ட அதிகாரி வலியுறுத்தி இருந்தார்’. அக்காலகட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்களை விட, நீதித்துறை தமது பங்கைப் பற்றிய கூடிய விழிப்புணர்வு உடையவர்களாக இருந்ததாக தோன்றுகின்றது.

இறுதியில் மரண தண்டனை 2004 இல் முற்றிலும் நீக்கப்பட்டது. இதன் முழுமையான நீக்கம் 2008 இல் யாப்பின் ஒப்புதல் பெறப்பட்டதோடு, பௌத்த விழுமியங்களின் அடிப்படையில் மாற்றப்பட்டது தெளிவாகவுள்ளது. ‘பௌத்த பண்பாட்டிலும் உலகளாவிய மனித விழுமியங்களிலும் வேரூன்றிய ஒரு நல்ல மற்றும் இரக்கமுள்ள சமுதாயத்தின் உண்மையான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு உதவும் நிலைமைகளை உருவாக்க அரசு பாடுபடும்’ என்பது புதிய யாப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

(2008ஆம் ஆண்டு யாப்பு, அரச கொள்கைக்கான நியமங்கள் 9 (20)ஆம் பிரிவு).  

யாப்பில் மேலும், ‘ஒரு நபர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படக் கூடாது’ என்பதும் ‘ஒரு நபர் காயம்இ சித்திரவதை அல்லது மற்றொரு நபரைக் கொல்வது போன்ற செயல்களை சகித்துக் கொள்ளவோ அல்லது பங்கேற்கவோ கூடாது மேலும் இதுபோன்ற செயல்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது. ( 7(18) ஆம் பிரிவு மற்றும் 8(5) ஆம் பிரிவு). (வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது).  

பௌத்தத்தின் செயலூக்கமான பங்கைப் பற்றி பூட்டான் காட்டிய கரிசனைஇ மற்றும் அதை செயலிலும் மனநிலையிலும் கடைப்பிடிப்பதற்கு எடுத்த முயற்சி என்பவற்றில் இருந்து நாம் சிலவற்றை கற்றுக்கொள்ள முடியும். 

மூலம்: ‘சட்டத்தை மீறுதல்: முன்வினைப்பயன்இ திருட்டு மற்றும் அதன் தண்டனை’ (2008), மற்றும் ‘சில்கன் முடிச்சைப் பிரிப்பது? பௌத்தம், அரசியலமைப்பு மற்றும் பூட்டானின் இரட்டை அமைப்பு’ (வெளியிடப்படாத காகிதம் 2006), ரிச்சர்ட் று. வைட்கிராஸ் எழுதியது.

மானேல் பொன்சேகா