மாலைதீவின் தலைநகரான  மாலேயில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மாலைதீவின் தலைநகரான மலேயிலுள்ள குடியிருப்பு பகுதியில் இராசயனங்கள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கிடங்கிலேயே இவ்வாறு தீ ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு உயிரிழந்த நபர் 49 வயதுடையவர் என தெரிவித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் மேலும்  தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த இடத்தில் ஏற்பட்ட தீயானது அருகில் உள்ள குடியிருப்புகளில் பரவிய நிலையில் நான்கு மணி நேரத்தில் அந்நாட்டு தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீ விபத்து தொடர்பில் அந்நாட்டு இராணுவ அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,

வெடிப்பு இடம்பெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் 5 பேர் மீட்கப்பட்டதோடு , ஆறு வீடுகள் மற்றும் இரசாயன கிடங்குகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.