நாட்டு மக்கள்   மிக அதி­க­ளவில் எதிர்­பார்த்­தி­ருந்த   நாட்டின் அடுத்த நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியை  தெரி­வு­செய்­வ­தற்­கான  தேர்தல்  எதிர்­வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி  சனிக்­கி­ழமை   காலை 7 மணி­முதல் மாலை 4 மணி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.  அத்­துடன்   ஒக்­டோபர் மாதம் 7ஆம் திகதி   9 மணி­யி­லி­ருந்து 11 மணி­வரை ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்கள் தாக்கல் செய்­யப்­ப­டு­வ­தற்­கான காலப்­ப­கு­தி­யாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 

பிர­தி­நி­தித்­துவ   ஜன­நா­யக முறை­மையில் முக்­கிய அம்­ச­மாக கரு­தப்­படும்  தேர்தல் ஊடாக  மக்கள்   தமது  அடுத்த  நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான சந்­தர்பம் இத­னூ­டாக கிடைக்­கின்­றது.  கடந்த 15ஆம்  திக­தி­யி­லி­ருந்து 30ஆம் திகதி வரை   ஜனா­தி­பதி  தேர்­தலை அறி­விப்­ப­தற்கு தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு அவ­காசம் இருந்­தது. அந்த அடிப்­ப­டை­யி­லேயே  கடந்த வியா­ழக்­கி­ழமை இதற்­கான வர்த்­த­மானி அறி­வித்தல்   வெளி­யா­கி­யது.  

அர­சி­ய­ல­மைப்பின்  19ஆவது திருத்த சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டதன் பின்னர் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட  ஜனா­தி­பதி என்று கூறு­வது  எந்­த­ளவு தூரம் சரி­யா­ன­வாதம் முன்­வைக்­கப்­பட்­டாலும் இன்னும் நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­னவர்  அதி­கா­ர­மிக்­க­வ­ராக காணப்­ப­டு­கின்றார். மக்­க­ளினால் நேர­டி­யாக   தெரி­வு­செய்­யப்­ப­டு­கின்ற ஜனா­தி­ப­திக்கு   பல அதி­கா­ரங்கள் காணப்­ப­டு­கின்­றன. எனினும்   19ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக  நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் பல  அதி­கா­ரங்கள்    நீக்­கப்­பட்­டன.  

விசே­ட­மாக   பாரா­ளு­மன்­றத்தை  ஒரு­வ­ரு­டத்தில் கலைப்­ப­தற்கு இருந்த அதி­காரம்    அகற்­றப்­பட்­டது.   நான்­கரை வரு­டங்­களின் பின்­னரே பாரா­ளு­மன்­றத்தை கலைக்க முடியும் என்ற தெரிவு கொண்­டு­வ­ரப்­பட்­டது.  அதே­போன்று   சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிறு­வப்­பட்­டன. இத­னூ­டாக  முக்­கிய பத­வி­க­ளுக்­கான நிய­ம­னங்கள் சுயா­தீன  ஆணைக்­கு­ழுவின் அங்­கீ­கா­ரத்­துடன் செய்­யப்­ப­ட­வேண்டி ஏற்­பட்­டி­ருக்­கி­றது. 

ஜனா­தி­ப­தியின் பத­விக்­காலம் ஆறு வரு­டங்­க­ளி­லி­ருந்து ஐந்து வரு­டங்­க­ளாக குறைக்­கப்­பட்­ட­துடன்   ஜனா­தி­பதி  பத­வியில் ஒருவர்   இரண்­டு­த­ட­வை­க­ளுக்கு மேல் இருக்க முடி­யாது என்ற புதிய பிரிவும் கொண்­டு­வ­ரப்­பட்­டது.  மேலும் ஜனா­தி­ப­தி­யா­னவர்  பாரா­ளு­மன்­றத்­துக்கு பொறுப்­புக்­கூ­ற­வேண்டும் என்றும்   மூன்று மாதத்­துக்கு  ஒரு­த­டவை  பாரா­ளு­மன்­றத்தில் சமுக­ம­ளிக்­க­வேண்டும் என்றும்  பல ஏற்­பா­டுகள் இந்த 19ஆவது திருத்தச்சட்­டத்தின் ஊடாக கொண்­டு­வ­ரப்­பட்­டது. எனவே   கடந்த 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற  தேர்­தலில்   தெரி­வு­செய்­யப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன  சகல அதி­கா­ரங்­களும் பொருந்­திய நிறை­வேற்று அதி­காரம் கொண்ட நிறை­வேற்று  ஜனா­தி­ப­தி­யா­கவே  பத­விக்கு வந்தார். 

ஆனால் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடை­பெறும் தேர்­தலில் தெரி­வாக உள்ள புதிய ஜனா­தி­பதி   முக்­கி­ய­மான சில அதி­கா­ரங்கள் அற்­ற­வ­ரா­கவே பத­விக்கு வர­வுள்­ள­வ­ரா­கவே  காணப்­ப­டு­கிறார். தற்­போது அந்த அதி­கா­ரங்கள் பாரா­ளு­மன்­றத்தில்  பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 

தற்­போ­தைய அர­சியல்   கள­நி­லை­மையில்   ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான சூடான நகர்­வுகள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்ற தரு­ணத்தில்  அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலின் கட்­ட­மைப்பு மற்றும்    அந்­தப்­ப­த­வியின் தன்மை தொடர்பில் மக்கள் அறிந்­து­கொள்­வது முக்­கி­ய­மாகும்.   எப்­ப­டி­யி­ருப்­பினும் தற்­போது தேர்தல் திரு­விழா ஆரம்­பித்­தி­ருக்­கி­றது.  அனல் பறக்கும் பிர­சா­ரங்கள் அடுத்­து­வரும் இரண்டு மாதங்­களில் இடம்­பெ­ற­போ­கின்­றன.  பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள்  நாடு­மு­ழு­வதும்   பிர­சா­ரக்­கூட்­டங்­களை   நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள்   பர­ப­ரப்­பாக   இடம்­பெ­று­கின்­றன. 

 மக்­களும்  வேட்­பா­ளர்கள் தொடர்பில் ஆர்­வத்தை வெளிக்­காட்ட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர்.   அது­மட்­டு­மன்றி  பிர­தான கட்­சி­களின் வேட்­பாளர் விரைவில் தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­க­ளையும் வெளி­யி­டு­

வார்கள்.  அவற்றில்   தாம்  ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­படும் இடத்து  எவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து செல்வோம் என்­பது தொடர்பில்  தமது கொள்­கைத்­திட்­டங்­களை வேட்­பா­ளர்கள் வெளி­யி­டு­வார்கள்.  

ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பான நிலை­மைகள் இவ்­வாறு இருக்­கையில்  கட்­சிகள் தற்­போது   என்­ன­செய்­து­கொண்­டி­ருக்­கின்­றன என்­பது தொடர்­பிலும்   மக்கள்   ஆர்வம் செலுத்தி இருக்­கின்­றனர்.   விசே­ட­மாக ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் யார் என்­பதை   அறிய மக்கள் மத்­தியில்  அதீத ஆர்வம் காணப்­ப­டு­கின்­றது.   இது ஒரு இயல்­பான விட­யமே ஆகும். தம்மை  அடுத்த ஐந்து வரு­டங்­க­ளுக்கு  ஆட்சி செய்­யப்­போ­வது   யார்? இந்த நாட்டை  வழி­ந­டத்­தப்­போ­வது யார்? இந்த நாட்டை அடுத்த ஐந்து வரு­டங்­களில் முன்­னேற்­ற­மான பாதையில் கொண்­டு­செல்­லப்­போ­வ­துயார்  என்ற ஆர்வம் மக்­க­ளிடம் காணப்­ப­டு­வது இயல்­பான விட­ய­மாகும். அந்­த­வ­கையில்  தற்­போ­தைய சூழலில் 

ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­முன  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக   முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்­கிறார். அவர் தற்­போது நாட­ளா­விய ரீதியில் கூட்­டங்­களில் கலந்­து­கொண்டு  உரை­யாற்­றி­வ­ரு­கிறார்.  மேலும்  சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­னவில் இணைந்­து­கொண்­டுள்ள கூட்டுக் கட்­சிகள் பல இடங்­களில் கோத்­த­பா­ய­வுக்கு ஆத­ர­வான  கூட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர்.  சாதக, பாதக விமர்­ச­னங்­களை தாண்டி  கோத்­த­பாய ராஜ­பக் ஷ 

இந்­தக்­கூட்­டங்­களில் பங்­கேற்று வரு­கிறார்.  

அவ­ரு­டைய அமெ­ரிக்க பிர­ஜா­வு­ரிமை தொடர்­பான விட­யத்தில் இன்னும் தெளி­வற்­ற­தன்மை  காணப்­ப­டு­வ­தா­கவே சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. எனினும்  தான் அமெ­ரிக்கப் பிர­ஜா­வு­ரி­மையை நீக்­கிக்­கொண்­ட­தா­கவும் அதனை  உரிய நேரத்தில்  தேர்தல் ஆணைக்­கு­ழு­விற்கு சமர்ப்­பிப்­ப­தா­கவும் கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரி­வித்­தி­ருக்­கிறார்.   கோத்­த­பாய ராஜ­பக் ஷ சார்பில் விரைவில் தேர்தல் விஞ்­ஞா­பனம் வெளி­யி­டப்­படும். அதன்­போது அவ­ரு­டைய  கொள்­கை­களை மக்கள் அறிந்து கொள்­ளலாம். குறிப்­பாக பொரு­ளா­தாரக் கொள்­கைகள், தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்ட அணு­கு­முறை, பொறுப்­புக்­கூறல் பொறி­முறை, போன்ற விட­யங்­களில்  அவர்  எவ்­வா­றான கொள்­கை­களை கொண்­டி­ருக்­கின்றார் என்­பதை   தேர்தல் விஞ்­ஞா­ப­னங்­களின் ஊடாக   அறிந்­து­கொள்ள முடியும். 

அதே­போன்று மக்கள் விடு­தலை முன்­னணி தமது  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக அக்­கட்­சியின் தலைவர் அநு­ர­கு­மார திஸா­நா­யக்­கவை   கள­மி­றக்­கி­யி­ருக்­கி­றது.  அநு­ர­கு­மார திஸா­நா­யக்­கவும் தற்­போது நாட­ளா­வி­ய­அ ரீ­தியில் கூட்­டங்­களில் பங்­கேற்று வரு­கின்றார்.  ஒரு புதிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப தன்னை தலை­வ­ராக  தெரி­வு­செய்­யு­மாறு அவர் கூட்­டங்­களில் தெரி­வித்து வரு­கிறார். 

ஜனா­தி­பதி தேர்தல் நிலை­மைகள் இவ்­வாறு பர­ப­ரப்­பாக இயங்­கிக்­கொண்­டி­ருக்­கின்ற சூழலில் இன்னும் இரண்டு பிர­தான கட்­சிகள் தமது வேட்­பாளர் தொடர்பில் அறி­விக்­காமல் இருக்­கின்­றன.   ஆளும்  ஐக்­கிய தேசிய முன்­ன­ணியும்  சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் இது­வரை வேட்­பா­ளர்­களை அறி­விக்­க­வு­மில்லை.  அடுத்த நகர்வு குறித்து  எந்­த­வி­ட­யத்­தையும் தெளி­வாக கூற­வு­மில்லை.  இதனை  விரி­வாக பார்க்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. 

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியைப் பொறுத்­த­வ­ரையில்   அடுத்த  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய கள­மி­றக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­களே  அதிகம் இருப்­ப­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  இந்த விட­யத்தில்  மிகவும் ஒரு நெருக்­க­டி­யான கட்­டத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி இருந்­தது. விசே­ட­மாக  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும்  கட்­சியின் பிரதித் தலை­வரும்  அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தா­சவும்  வேட்­பாளர்  போட்­டியில்   இறங்­கி­யி­ருக்­கின்­றனர்.  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தான் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­ட­வேண்­டு­மென்ற  நிலைப்­பாட்டில் உறு­தி­யாக இருந்து வந்தார். அதற்­கான அர­சியல் காய்­ந­கர்த்­தல்­க­ளையும்  அவர் தீவி­ர­மாக முன்­னெ­டுத்து வந்தார்.   

  பங்­காளி கட்­சி­களின் ஊடா­கவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ராஜ­தந்­திர ரீதியில் காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். அதே­போன்று அமைச்சர் சஜித் பிரே­ம­தா­சவும் தானும்  ஜனா­தி­பதி தேர்­தலில்  போட்­டி­யிட்டே தீருவேன்  என்ற விட­யத்தை மிகவும் தீவி­ர­மாக கூறி­வ­ரு­கிறார். அவ­ருக்கு ஆத­ர­வாக பதுளை, மாத்­தறை,  மற்றும்  குரு­நாகல் ஆகிய பிர­தே­சங்­களில்  கூட்­டங்­களும் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. மங்­கள சம­ர­வீர,  மலிக்­ச­ம­ர­விக்­கி­ரம, ரஞ்சித் மத்­தும பண்­டார, கபிர் ஹாசீம்,  ஹரீன் பெர்­னாண்டோ, அஜித் பி பெரேரா, சுஜீ­வ­சே­ன­சிங்க உள்­ளிட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சஜித் பிரே­ம­தாச  ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும் என்று வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். தான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட தயார் என்றும் செயற்­கு­ழு­விலும்  பாரா­ளு­மன்­றக்­கு­ழு­விலும் வாக்­கெ­டுப்பை நடத்­து­மாறும் அமைச்சர் சஜித் பிரே­ம­தாச அண்­மையில்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு கடி­த­மொன்­றையும் அனுப்­பி­யி­ருந்தார்.

தான்  ஜனா­தி­பதி தேர்­தலில்  போட்­டி­யிட்டே தீருவேன் என்­பதை அமைச்சர் சஜித் பிரே­ம­தாச திட்­ட­வட்­ட­மாக கூறி­வந்தார்.  ஒரு கட்­டத்தில் பங்­கா­ளிக்­கட்­சி­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொண்­டு­வ­ரு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ச­விற்கு கூறி­யி­ருந்தார். அதற்­கேற்­ற­வ­கையில் அவரும் பங்­காளி கட்­சி­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.    அது­மட்­டு­மன்றி சஜித் பிரே­ம­தா­சவின் பிர­தி­நி­திகள்  கூட்­ட­மைப்­பையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்­தனர். இந்த சந்­திப்­பு­களில் எட்­டப்­பட்ட இணக்­கப்­பா­டுகள் முழு­மை­யாக வெளி­வ­ர­வில்லை. எனினும்  சந்­திப்­புக்கள் வெற்­றி­க­ர­மாக அமைந்­த­தாக அமைச்சர் சஜித் தரப்பில் தொடர்ச்­சி­யாக  வெளி­யி­டப்­பட்டு வந்­தது.  கூட்டுக் கட்­சி­களின் தலை­வர்கள்  சஜித்­துக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக அறி­வித்­த­தாக   அமைச்சர் ஹரீன் பெர்­னாண்டோ  தெரி­வித்­தி­ருந்தார்.  

எனினும் தற்­போது சபா­நா­யகர்  கரு ஜய­சூ­ரிய ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் சார்­பாக போட்­டி­யிடப் போவ­தாக  தக­வல்கள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன.  இது தொடர்பில் கரு­ஜ­ய­சூ­ரி­யவும் ஒரு அறிக்­கையை  சில தினங்­க­ளுக்கு முன்னர் வெளி­யிட்­டி­ருந்தார். அதா­வது நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக ஐக்­கிய தேசிய முன்­னணி அனைத்து தரப்­பி­ன­ரதும் ஆத­ர­வுடன்  வேண்­டு­மானால் தான் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட தயார் என்று சில தினங்­க­ளுக்கு முன்னர் கரு ஜய­சூ­ரிய அறிக்­கை­மூலம் வெளி­யிட்­டி­ருந்தார். இத­னூ­டாக அவர் தேர்­தலில் போட்­டி­யிட தயார் என்­பதை அறி­வித்­தி­ருந்தார். 

இது இவ்­வா­றி­ருக்க 1994ஆம் ஆண்­டி­லி­ருந்து  ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் முன்­வைக்­கின்ற  நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை நீக்­குவேன் என்ற சுலோ­கத்தை கருவும் தற்­போது கையில் எடுத்­தி­ருக்­கின்றார். கடந்த காலம் முழு­வதும் அவ்­வாறு வாக்­கு­றுதி அளித்து  ஆட்­சிக்கு வந்­த­வர்கள் அதனை நிறை­வேற்­ற­வில்லை. (ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை 19ஆவது திருத்த சட்­டத்தின் ஊடாக குறைத்­தி­ருந்தார்.)

ஆனால் சஜித் பிரே­ம­தா­சவும் விட்­டுக்­கொ­டுப்­ப­தாக  தெரி­ய­வில்லை. கடந்த வியா­ழக்­கி­ழமை ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின்  சுமார் 50க்கும் மேற்­பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சஜித் பிரே­ம­தா­சவை சந்­தித்து ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியில் இடம் கிடைக்­கா­விடின் பொதுக்­கூட்­டணி ஒன்றை அமைத்து ஜனா­தி­பதி தேர்­தலை எதிர்­கொள்­ளலாம் என ஆலோ­சனை வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும் தெரி­கி­றது. அவ்­வாறு  சஜித் பொதுக்­கூட்­டணி அமைத்து போட்­டி­யிடும்  பட்­சத்தில் சுதந்­திரக் கட்­சியின் ஆத­ர­வையும் பெற்­றுக்­கொள்ள முடியும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.  அவ்­வாறு சஜித் அணி தனித்து பொதுக் கூட்­டணி அமைத்தால் மும்­முனை போட்­டி­யா­கவே அமைந்­து­விடும். அது மேலும்  தேர்­தலை பர­ப­ரப்­பாக்­கி­விடும்.  எந்த வேட்­பா­ள­ருக்கும் 50 வாக்­கு­களை பெற முடி­யாமல் போய்­வி­டுமோ என்ற சிக்­கலும்  தோன்­றலாம். 

இதற்­கி­டையில்   நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி  முறை­மையை ஒழிப்­பது தொடர்­பா­கவும் பேசப்­பட்டு வரு­கி­றது.   எனினும் அந்த முயற்­சிக்கு சஜித் தரப்­பினர் கடும் எதிர்ப்பை வெளி­யிட்டு வரு­கின்­றனர். 

 இந்த பின்­னணியில் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பான அறி­விப்பு வந்­ததும் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி வேட்­பா­ளரை அறி­விக்கும்  விடயம் அடுத்­த­வாரம் இடம்­பெறும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கிறார். எனவே எதிர்­வரும் தினங்கள்  ஐக்­கிய தேசிய  கட்­சி­யையும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யையும் பொறுத்தவரையில் தீர்க்கமானதாக அமையும்.  

இதேவேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவளிப்பதா  தனித்துப்போட்டியிடுவதா  என்பது தொடர்பில் இன்னும் முடிவெடுக்காமலேயே இருக்கின்றது.  பொதுஜன பெரமுனவுடனான பேச்சுவார்த்தைகள்  வெற்றியடையாவிடின்  சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் பேச்சாளர் வியாழக்கிழமை அறிவித்திருந்தார். அதேவேளை சஜித் பொதுக்கூட்டணி அமைத்து போட்டியிட்டால் அவரை ஆதரிப்பது தொடர்பிலும் கட்சி பரிசீலிக்கும் என்றும்    அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.  

இந்த நிலையிலேயே  சுதந்திரக்கட்சி என்ன செய்யப்போகின்றது என்பது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தியிருக்கின்றனர்.  

ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சிகளின் தீர்மானங்கள்  தற்போது அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றன. முக்கியமாக ஐக்கிய தேசியக்கட்சிக்குள்ளேயே வேட்பாளரை தெரிவு செய்வதில் கடினமான கட்டங்களை தாண்டவேண்டி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய தேசியக்கட்சியின் பங்காளிக்கட்சிகள் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாகவும்   தெரிவிக்கப்படுகின்றது. எனவே இவ்வாறான சூழலில் ஐக்கிய தேசியக்கட்சி  எவ்வாறான தீர்மானத்தை எடுக்கும் என்பது  முக்கியத்துவம் மிக்கதாக அமைகிறது.  கரு ஜயசூரிய, ரணில் விக்கிரமசிங்க, மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய மூவரும்  தயாராகவே இருக்கின்றனர்.  தற்போது  கருவா சஜித்தா என்ற கேள்வி   எழ ஆரம்பித்திருக்கின்றது.  சில தினங்களில்  எப்படியோ  வேட்பாளர் யார் என்பதை  ஐ.தே.க. அறிவிக்கவேண்டும்.  அத்துடன்  தமது கட்சி எடுக்கப்போகும் நிலைப்பாட்டை சுதந்திரக்கட்சியும் அறிவித்தேயாகவேண்டும். என்ன நடக்கப்போகின்றது என்பதை சில தினங்களில்   பொறுத்திருந்து பார்ப்போம்.

ரொபட் அன்­டனி