2019 ரக்பி உலகக் கிண்ணப் போட்டியானது நேற்றைய தினம்  ஜப்பானின் தலைநகரம் டோக்கியோவில்  கோலாகலமாக ஆரம்பமானது.

2019 ரக்பி உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி ஜப்பான் மற்றும் ரஷ்ய அணிகளுக்கிடையே இடம்பெற்றது.

இப்போட்டியில் ஜப்பான் 30 க்கு 10 என்ற கோல் அடிப்படையில் ரஷ்யாவை வெற்றிகொண்டது.

போட்டியின் ஆரம்பத்தில் ரஷ்யா சிறப்பாக விளையாடியது.  போட்டியின் நான்காவது நிமிடத்தில், ரஷ்யா 2019 ஆம் ஆண்டின் ரக்பி உலகக் கோப்பையின் முதல் கோலை பெற்றுகொண்டது. 

ஆனால் முதல் பாதியின் முடிவில், ஜப்பான் 12-07 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியின் தொடக்கத்திற்குப் பிறகு, ஜப்பான் சிறப்பாக விளையாடி ரஷ்யாவை  30:10 என்ற அடிப்படையில் வெற்றிகொண்டது.