ஒருவர் முழுநாளும் துடுப்பெடுத்தாடுவார் - மற்றவர் முழுநாளும் மது அருந்துவார் -டிராவிட் சாஸ்திரி டுவிட்டர் பதிவு குறித்து ரசிகர்கள் சீற்றம்

Published By: Rajeeban

21 Sep, 2019 | 11:47 AM
image

இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ராகுல்டிராவிட்டை ஐசிசியும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையும் அவமதித்துள்ளதாக கொதித்தெழுந்துள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை டுவிட்டரில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஐசிசி தனது தலைசிறந்த வீரர்களிற்கான ஹோல் ஓவ் பேம் பிரிவில் ராகுல் டிராவிட்டின் பெயரை இணைத்துகொண்டுள்ள அதேவேளை டிராவிட் இடது கை வீரர் என தெரிவித்துள்ளது. ஐசிசியின் இணையத்தளத்திலேயே இந்த பிழை இடம்பெற்றுள்ளது.

இதேவேளை ராகுல்டிராவிட் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவிசாஸ்திரியுடன் காணப்படும் படமொன்றை வெளியிட்டுள்ள பிசிசிஐ இந்தியாவின் இரு தலைசிறந்த வீரர்கள் என குறிப்பி;ட்டுள்ளது.

இந்த இரு விடயங்களிற்கும் எதிராக  இந்திய ரசிகர்கள் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

16 வருடங்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய 36 சதங்கள் 63 அரைசதங்களுடன் 13,288 டெஸ்ட் ஓட்டங்களையும் 12 சதங்கள் 83 அரை சதங்களுடன் 10899 ஓட்டங்களையும் பெற்றவர் வலது கை துடுப்பாட்ட வீரரா இடது கைது துடுப்பாட்ட வீரரா என ஐசிசிக்கு தெரியாதா என சமீர் ரவுட் என்பவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளதுடன் ஐசிசிக்கு வெட்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஐசிசி மதுபோதையில் உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள டெரிக் கிளட்சொன் என்பவர்  உலக கிரிக்கெட்டின் தலைமை நிர்வாக அமைப்பினால் ஒரு துடுப்பாட்ட ஜாம்பவான் குறித்த சரியான தகவல்களை பெற முடியாதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை ராகுல்டிராவிட் ரவிசாஸ்திரியுடன் காணப்படும் படத்தை வெளியிட்டு இந்தியாவின்  இரு தலைசிறந்த வீரர்கள் என பிசிசிஐ குறிப்பிட்டுள்ளதை கடுமையாக சாடியுள்ள  அனு ஸ்மித்தா என்ற பெண் ரசிகை இது நகைச்சுவை என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல்டிராவி;ட்டை அவமரியாதை செய்யவேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைசிறந்த இந்திய வீரர்களில் ஒருவரான ராகுல்டிராவிட் காணப்படுகின்றார் அவ்வாறான மற்றொரு வீரரை காணமுடியவில்லை எனமற்றொரு வீரர் பதிவு செய்துள்ளார்.

ஒருவர் ஒரு நாள்  முழுவதும் விளையாடுவார் மற்றொருவர் முழு நாள் முழுவதும் மது அருந்துவார்,இருவரும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் ஆனால் வேறு களத்தில் என வின்னு என்பவர் பதிவு செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35