(இராஜதுரை ஹஷான்)

பயங்கரவாதி சஹ்ரானிற்கு கடந்த அரசாங்கம் ஒருபோதும் ஆதரவு வழங்கவில்லை. 2015 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அவ் வணியினர் செயற்பட்டனர் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல, தேசிய பாதுகாப்பினை அலட்சியப்படுத்திய அரசாங்கம் தற்போது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சிய பாதுகாப்பிற்கு  அரசாங்கம் உரிய  அந்தஸ்த்தினை வழங்கவில்லை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது.  தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்பதே நாட்டு மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது. 

ஆகவே தங்களின் இயலாமையினை மறைத்துக் கொள்ள கடந்த அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டை முன்வைப்பதால் எவ்வித  மாற்றமும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.