யாழ்ப்பாணத்தில் இயங்கும் பிரபல பாடசாலையொன்றின் அதிபர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் பெற்றுக்கொண்டமைக்கான போதிய ஆதாரங்களுடன் குறித்த அதிபர் இன்று நண்பகல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் அனுமதிக்காக 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்டதற்கான உரிய ஆதாரத்துடன் அதிபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.