பாக்கிஸ்தானின் பிரபல பெண் மனித உரிமை ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில்  பல மாதங்கள் தலைமறைவாகயிருந்த பின்னர் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றுள்ளார்.

குலாலாய் இஸ்மாயில் அரசஎதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் வன்முறைகளை தூண்டுகின்றார் என தெரிவித்திருந்த பாக்கிஸ்தான் அரசாங்கம்  அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடை விதித்திருந்தது.

இந்;நிலையிலேயே அவர் பாக்கிஸ்தானிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.

கடந்த சில மாதங்கள் மிகவும் மோசமானவையாக காணப்பட்டன,நான் அச்சுறுத்தப்பட்டேன்,துன்புறுத்தப்பட்டேன் என தெரிவித்துள்ள அவர் நான் உயிருடன் இருப்பதே அதிஸ்டமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.

பாக்கிஸ்தான் அரசாங்கத்தினால் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்  தான் எவ்வாறு அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றார் என்பதை குறிப்பிடாத  குலாய்லாய் ஆனால் நான் விமானநிலையம் மூலமாக வெளியேறவில்லை என தெரிவித்துள்ளார்.

நான் இலங்கைக்கு சென்று அங்கிருந்து அமெரிக்காவிற்கு வந்தேன் என அவர் பிரீ யுரோப் வானொலிக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை எனது பயணம் குறித்து நான் மேலதிக தகவல்களை வெளியிட்டால் அது எனக்கு பாதுகாப்பு வழங்கியவர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவர் நியுயோர்க் டைம்சிற்கு தெரிவித்துள்ளார்.

எனது மகளிற்கு எதிராக பாக்கிஸ்தான் நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் உள்ளன,இதனால் அவர் தனது உயிருக்கு கடும் ஆபத்து உள்ளது என அவர் தீர்மானித்தார்  என குலாய்லாவின் தந்தை முகமட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே மகள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்தார் எனவும் அவ தெரிவித்துள்ளார்.

குலாலாய் இஸ்மாயில் பாக்கிஸ்தானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக குரல்கொடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பெண்கள் குழந்தைகளிற்கு எதிரான உரிமை மீறல்களிற்கு எதிராக இவர் அதிகளவில் குரல்கொடுத்து வந்தார்.

சிறுமிகள் மற்றும் இளம் பெண்களிற்கு அவர்களது உரிமைகள் குறித்து கல்வி புகட்டுவதற்காக தனது 16 வயதில்  அரசசார்பற்ற அமைப்பொன்றை ஆரம்பித்திருந்த குலாய்லா இஸ்மாயில்  தீவிரவாதமயப்படுத்தலிற்கு எதிராகவும் தனது போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

2018 இ;ல் லண்டனிலிருந்து பாக்கிஸ்தான் திரும்பியவேளை அவரை கைதுசெய்திருந்த பாக்கிஸ்தான் அரசாங்கம் செய்திருந்தது.

பின்னர் இவ்வருட ஆரம்பத்திலும் அவரை கைதுசெய்த அதிகாரிகள் பின்னர் பயணதடையை விதித்திருந்தனர்.