(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம் )

மன்னார் மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீடுகளுக்கான நிதியை விடுவிப்பதற்கு ஏதேனும் தடைகள் உண்டா? 3285 வீடுகளுக்குரிய குறிப்பிட்ட நிதியானது தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மூலமாக எப்போது விடுவிக்கப்படும்? என  டக்ளஸ் எம்.பி. பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 

அதேபோன்று, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இத்தகைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மக்களை இனங்கண்டு, அவர்களுக்கும் சாதகமானதொரு தீர்வினை விரைவில் வழங்க முடியுமா? மேற்படி கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்களையும் அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 27/2 நியதிச் சட்டத்தின் கீழான கேள்வி நேரத்தின்போதே  டக்ளஸ் எம்பி இவ்வாறு கேள்வி எழுப்பினார்.