குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்து இளம் பெண் ஒரு வர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

ரஷ்யாவின் கிரோவோ-செபேட் ஸ்க் நகரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணான எவ்ஜீனியா சுல்யாதியேவா தனியார் நிறு வனத்தில் கணக்காளராக பணி யாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் குளிப்பதற்காக தனது வீட்டிலுள்ள குளியல் அறைக்குள் சென்றுள்ளார்.

அங்கு அவர் குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு, அதன் அருகிலுள்ள மின்சாரப் பெட்டியில் தனது கையடக்கத் தொலைபேசிக்கு மின்­­­னேற்­ற மின்சார இணைப்பை ஏற்படுத்தி விட்­டு குளியல் தொட்டிக்குள் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார்.

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக ‘சார்ஜ்’ போடப் பட்டிருந்த அவரது கையடக்கத் தொலைபேசி குளியல் தொட் டிக்குள் தவறி விழுந்தது. இதில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து எவ்ஜீனியா சுல்யாதியேவாவின் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

இதற்கிடையே தனது மகள் குளியலறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த எவ்ஜீனியாவின் தாய் உள்ளே சென்று பார்த்த போது அங்கு எவ்ஜீனியா சுல்யாதியேவா குளியல் தொட்டிக்குள் பிணமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டு சுல்யாதியேவாவின் தாய் அதிர்ச்சியில் உறைந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.