கொழும்பு துறைமுக அபிவிருத்தித்திட்டம் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

Published By: Robert

03 Dec, 2015 | 10:13 AM
image

இலங்கை அர­சாங்­கத்­தினால் விரைவில் மீண் டும் ஆரம்­பிக்­கப்­ப­டு­மென சீனா மிகவும் வலு­ வான முறையில் நம்­பு­கி­றது என்று சீன வெளி­வி­வ­கார அமைச்சின் தெற்­கா­சிய நாடு­க­ளுக்­கான பிரிவின் பணிப்­ப­ாளரும், கொன்­ஸி­யூல­ரு­மான சென்பெங் தெரி­வித்தார். சீனா­வா­னது

இலங்கை இந்­தியா உள்­ளிட்ட தெற்­கா­சிய நாடு­களின் அபி­வி­ருத்­தியில் பாரிய கரி­ச­னையை செலுத்­து­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்­கை­யி­லி­ருந்து சீனா­வுக்கு ஊடக சுற்­றுலா ஒன்றை மேற்க்­கொண்டு விஜயம் செய்­தி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் குழு­வுடன் நேற்­று­முன்­தினம் சீன வெளி­வி­கார அமைச்சின் அலு­வ­ல­கத்தில் நடாத்­திய சந்­திப்­பின்­போது சென்பெங் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடையில் ஆயிரம் வரு­டங்­களைத் தாண்­டிய மிகவும் நெருக்­க­மான சிறந்த உறவு காணப்­ப­டு­கி­றது. இந்த நெருக்­க­மான இரு தரப்பு உறவை மேலும் வலு­வூட்­டு­வதே சீன அர­சாங்­கத்தின் நோக்­க­மாகும். அதற்­கா­கவே சீன அர­சாங்கம் பாரிய வேலைத்­திட்ட முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது.

குறிப்­பாக சீன ஜனா­தி­ப­தியின் இலங்கை விஜ­யமும், இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சீன விஜ­யமும் இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான நெருங்­கிய உற­வினைக் காட்­டு­கின்­றன.

இலங்­கையில் புதிய அர­சாங்கம் கடந்த செப்­டம்பர் மாதம் பத­விக்கு வந்­ததும் சீன அர­சாங்கம் வாழ்த்து தெரி­வித்­த­துடன் இலங்­கைக்கு விசேட தூது­வ­ரையும் அனுப்­பி­யி­ருந்­தது. அத்­துடன் சீனா­வு­ட­னான உறவு தொடர்பில் இலங்­கையின் புதிய அர­சாங்கம் சாத­க­மான செயற்­பா­டு­களை மேற்­கொள்­வது எமக்கு மகிழ்ச்­சி­ய­ளித்­துள்ள விட­ய­மாகும்.

இலங்­கையின் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளிலும் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யிலும் உத­வி­களை வழங்­கு­வ­தற்கு சீனா தயா­ராக இருக்­கின்­றது. சீனா­வி­னதும் இலங்­கை­யி­னதும் இரு தரப்பு உறவு வலு­வ­டைய வேண்டும் என்­பது எனது நோக்­க­மாகும். இலங்­கைக்கு பொரு­ளா­தார ரீதி­யான உத­வி­களை வழங்­கவும், உற்­கட்­ட­மைப்பு வச­தி­களை வழங்­கவும் சீனா எதிர்­பார்த்­துள்­ளது.

சீனா­வா­னது மிகவும் வேக­மாக வளர்ச்­சி­ய­டைந்து வரு­கின்ற நாடாக உரு­வெ­டுத்­துள்­ளது. அந்த வளர்ச்­சியின் பயனை இலங்கை உள்­ளிட்ட சீனாவின் அயல் நாடு­களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்­பதே எமது விருப்­ப­மாகும். அதற்­கா­கவே நாங்கள் பாரிய முயற்ச்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றோம்.

குறிப்­பாக சீனா இலங்­கையின் கைத்­தொ­ழிற்­துறை மற்றும் உட்­கட்­ட­மைப்பு துறையில் பாரிய உத­வி­களை செய்­வ­தற்கு எதிர்­பார்க்­கி­றது. அவ்­வா­றான கொள்­கை­யு­ட­னேயே நாங்கள் செயற்­பட்டு வரு­கின்றோம்.

இலங்­கையில் புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்­ததும் எமது இரு­த­ரப்பு உறவில் சில சிக்­கல்கள் எற்­பட்­டதைப் போன்ற நிலைமை உரு­வா­னது. ஆனால் துறை­முக நகர அபி­விருத் திட்டம் தவிர்ந்த இலங்­கையில் சீனா மேற்க்­கொண்டு வரும் அனைத்து அபி­வி­ருத்தித் திட்­டங்­களும் தற்­போது மீண்டும் ஆரம்­பிக்­கப்­பட்டு வெற்­றி­க­ர­மாக இடம்­பெற்று வரு­கி­றது.

அதன்­படி கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தித் திட்­டமும் புதிய அர­சாங்­கத்­தினால் விரைவில் ஆரம்­பிக்­கப்­ப­டு­மென நம்­பு­கிறோம். இது தொடர்­பான அறி­விப்பை இலங்கை அர­சாங்கம் விரைவில் வெளி­யி­டு­மென எதிர்­பார்க்­கிறோம். குறிப்­பாக கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தித் திட்­ட­மா­னது இலங்­கையின் எதிர்­கா­லத்­திற்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். இந்தத் திட்­டத்தில் இரண்டு நாடு­களும் நன்­மை­ய­டை­ய­வுள்­ளன என்­பதே உண்­மை­யாகும். அனைத்துத் திட்­டங்­களும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மென எதிர்­பார்க்­கிறோம்.

இலங்கை உள்­ளிட்ட தெற்­கா­சி­யாவின் அனைத்து நாடு­க­ளு­ட­னனும் நாங்கள் சிறந்த உறவை வளர்த்து வரு­கிறோம். குறிப்­பாக இந்­தி­யா­வுடன் எமக்கு தற்­போது பரஸ்­பரம் சிறப்­பாக செயற்­பட்டு வரு­கின்­றன. சீனாவின் "ஒரு பாதை" என்ற எண்­ணக்­க­ரு­வா­னது தெற்­கா­சிய நாடு­க­ளுக்கு நன்மை பயப்­ப­தாக அமையும். இந்தப் பிராந்­தி­யத்தில் கடற்­பா­து­காப்பு என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். இந்த கடற்­பா­து­காப்பு செயற்­திட்­டத்­திற்கு இலங்­கையின் பங்­க­ளிப்பு மிகவும் முக்­கி­ய­மா­னது. இலங்­கையின் அமை­விடம் ஒரு முக்­கிய கார­ண­மாக காணப்­ப­டு­கின்­றது.

கேள்வி : துறை­முக அபி­வி­ருத்தித் திட்­டத்தை இலங்கை முன்­னெ­டுக்கும் என நம்­பு­கி­றீர்­களா ?

பதில் : இலங்­கையின் கடந்த அர­சாங்­கத்­துடன் செய்து கொண்ட புரிந்­து­ணர்வு அடிப்­ப­டை­யி­லேயே துறை­முக நகர அபி­வி­ருத்தித் திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. தற்­போது புதிய அர­சாங்கம் தற்­கா­லி­க­மாக அதனை நிறுத்­தி­யுள்­ளது. எனினும் ஏனைய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் மீள ஆரம்­பிக்­கப்­பட்டு விட்­டன. அந்த வகையில் இந்த திட்­டமும் விரைவில் ஆரம்­பிக்­கப்­ப­டு­மென நம்­பு­கிறோம்.

கேள்வி: துறை­முக அபி­வி­ருத்தித் திட்­டத்தை முன்­னெ­டுக்கும் நிறு­வனம் என்ன கூறு­கி­றது ?

பதில் : அந்த நிறு­வ­னத்­துடன் நாங்கள் நெருங்­கிய தொடர்­புடன் இருக்­கின்றோம்.

கேள்வி: திட்டம் இடை­நி­றுத்­தப்­பட்­டதால் நிறு­வ­னத்­துக்கு நஷ்­டமா?

பதில்: சில சிக்­கல்கள் உள்­ளன. இதன் செலவு மிக பெரி­யது. ஆனால் திட்டம் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது எவ்­வ­ளவு நஷ்டம் ஏற்­பட்­ட­தென்­பது எனக்கு தெரி­யாது.

கேள்வி: இந்த திட்­டத்­தி­னூ­டாக சில ஏக்கார் காணிகள் சீனா­வுக்கு சொந்­த­மா­க­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எனவே இது இறைமை சம்­பந்­தப்­பட்ட விடயம். அத­னால்தான் புதிய அர­சாங்கம் இதனை தடுத்து நிறுத்­தி­யுள்­ள­தென நீங்கள் நினைக்­கின்­றீர்­களா?

பதில்: நாங்கள் அப்­படி நினைக்­க­வில்லை. ஒரு­வேளை நீங்கள் அப்­படி நினைக்­கின்­றீர்­களா? இது தவ­றான அபிப்­பி­ர­யா­க­மாகும். நாங்கள் இலங்­கைக்கு உதவி செய்­கிறோம். அதற்கு மாறாக நாங்கள் எதையும் கேட்­க­வில்லை இந்த திட்­டத்­தி­னூ­டாக இரண்டு நாடு­க­ளுக்கும் நன்­மை­யுள்­ளது.

கேள்வி: அப்­ப­டி­யானால் திட்­டத்தை மீள ஆரம்பிக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: புதிய அரசாங்கம் பதவிக்கு வந்திருக்கிறது. ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது எவ்வாறெனினும் அனைத்தும் நன்றாக நடக்கும் என்று எனது எதிர்பார்ப்பாகும். சீனா மேலும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை இலங்கையில் ஆரம்பிக்கவுள்ளது. சீன நிறுவனங்களிடம் பாரிய தொழில்நுட்பம் காணப்படுகிறது எனவே அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வது இலக்கு.

கேள்வி: எவ்வாறான புதிய திட்டங்கள் ஆரம்பிக்கவுள்ளன?

பதில்: இதனை தற்போது கூற முடியாது ஆனால் இரண்டு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வேலைத் திட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38