ஈரான் எண்ணெய் நிறு­வ­னங்கள் மீது சைபர் தாக்­குதல் உட்­பட வெவ்­வேறு வகை­யான தாக்­கு­தல்­க­ளுக்­கு­ரிய திட்­டங்­களை ட்ரம்­பிடம் இரா­ணுவத் தலை­வர்கள் வழங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சவூதி அரே­பி­யாவின் எண்ணெய் ஆலை மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தலின் பின்னால் ஈரான் இருப்­ப­தாக அமெ­ரிக்கா கூறி வரு­கி­றது. ஆனால் ஈரான் இதனை மறுக்­கி­றது. இதற்­கி­டையே சவூதி அரே­பி­யாவில் தாக்­குதல் நடத்­தி­ய­வர்­க­ளுக்கு எதி­ராக பதில் தாக்­கு­தலை நடத்த அமெ­ரிக்க இரா­ணுவம் தயா­ராக இருப்­ப­தாக ட்ரம்ப் கூறி­யி­ருந்தார்.

இந்த நிலையில் ஈரானின் எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் உள்­ளிட்­ட­வற்றின் மீது தாக்­குதல் நடத்­து­வ­தற்­கான திட்­டத்தை தயா­ரித்து அமெ­ரிக்க இரா­ணுவத் தலை­வர்கள் ஜனா­தி­பதி ட்ரம்­பிடம் வழங்­கினர்.

வெள்ளை மாளி­கையில் நடை­பெற்ற தேசிய பாது­காப்பு குறித்த ஆலோ­சனை கூட்­டத்தின் மீது, ஈரான் எண்ணெய் நிறு­வ­னங்கள் மீது சைபர் தாக்­குதல், நேரடி இரா­ணுவத் தாக்­குதல் உட்­பட வெவ்­வேறு வகை­யான தாக்­கு­தல்­க­ளுக்­கு­ரிய திட்­டங்­களை ட்ரம்­பிடம் இரா­ணுவத் தலை­வர்கள் வழங்­கி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால், ஈரான் மீது தாக்­குதல் நடத்­து­வ­தற்கு ட்ரம்ப் மறுத்­து ­விட்­ட­தாக வெள்­ளை­மா­ளிகை வட்­டாரத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.