ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும்  பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவின் தீப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படவுள்ளது.

21/4 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை  தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும்  கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து சட்டமா அதிபர் கடந்த ஜூலை மாதம் கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.