கிளிநொச்சி, சிவபுரம் பகுதியில் கடற்படையினரால் அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் காணப்படலாம் என கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் கடற்படையினரால் குறித்த அகழ்வு பணிகள் முன்னடுக்கப்பட்டு வருகின்றது. 

குறித்த அகழ்வு பணியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். 

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் த.சரவணராஜா பார்வையிட்டதை அடுத்து குறித்த அகழ்வு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.