சவூதி அரே­பியா நாட்டு வான் எல்­லையைப் பாது­காக்க தென் கொரி­யா­வி­ட­மி­ருந்து ஏவு­கணை தடுப்பு கவன்­களை வாங்க சவூதி இள­வ­ரசர் முக­மது பின் சல்மான் திட்­ட­மிட்­டுள்ளார்.

சவூதி அரே­பி­யாவின் மிகப்­பெ­ரிய அப்காய்க் எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்திலுள்ள எண்ணெய் வயலை குறி­வைத்து ஹவுத்தி கிளர்ச்­சி­யா­ளர்கள் 10 ஆளில்லா விமா­னங்கள் மூலம் தாக்­குதல் நடத்­தினர்.

இந்தத் தாக்­கு­தலால் சவூ­தியில் தினந்­தோறும் 50 சத­வீதம் பெட்­ரோ­லிய கச்சா எண்ணெய் உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. நாளொன்­றுக்கு சுமார் 57 இலட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்­பத்தி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. உல­கிற்கு தேவை­யான 10 சத­வீத கச்சா எண்ணெய் சவூதி அரே­பி­யாவில் உற்­பத்­தி­யாகும் நிலையில், அங்கு நடத்­தப்­பட்ட ஆளில்லா விமானத் தாக்­கு­தலும் அதன் கார­ண­மாக ஏற்­பட்ட உற்­பத்திக் குறைப்பும் சர்­வ­தேச சந்­தையில் கச்சா எண்ணெய் விலையில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தத் தொடங்கியுள்­ளது.

இந்­நி­லையில், சவூதி இள­வ­ரசர் முக­மது பின் சல்மான் தென்கொரிய ஜனா­தி­பதி மூன்ஜே இன்னை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு சவூதி நாட்டு வான் எல்­லையில் பாது­காப்பை பலப்­ப­டுத்­து­வது தொடர்­பாக ஆலோ­சனை நடத்­தி­யுள் ளார்.

இந்த உரை­யா­டலின் போது, எண் ணெய்க் கிடங்­கு­களில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள் சவூதி அரே­பி­யா­வுக்கு மட்­டு­மல்­லாமல் உலக நாடு­க­ளுக்கும் மிகப்­பெ­ரிய பாது­காப்பு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இந்தப் பிரச்­சி­னையை உலக நாடுகள் இணைந்து தீர்க்­க­ வேண்டும் என தென் கொரிய ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.

இதை­ய­டுத்து பேசிய முக­மது பின் சல்மான், சவூதி வான் எல்­லை­களை ஏவு­கணைத் தாக்­குதல் உட்­பட அனைத்து வித­மான வான்­வெளி அச்­சு­றுத்­தல்­க­ளிலி­ருந்து பாது­காக்க ஏவு­கணை தடுப்பு கவன்­களை தென் கொரியா வழங்­க­வேண்டும் என வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.  

சவூதி அரே­பி­யா­வி­ட­மி­ருந்து பெட் ரோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகளில் தென் கொரியாவுக்கு மட்டும் ஏற்றுமதியில் சுமார் 30 சதவீதம் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.