பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற்ற வலைப் பந்தாட்டப் போட்டித் தொடரின் சம்பியன் பட்டத்தை யாழ். பல்க லைக்கழக அணி வென்றது.

13 ஆவது இலங்கை பல்­க­லைக் க­ழக விளை­யாட்டுப் போட்­டி­களின் கீழ் நடத்­தப்­பட்ட வலைப்­பந்துத் தொடரின் இறுதிப் போட்­டி யில் கொழும்பு பல்­க­லைக்­க­ழக அணியை வீழ்த்தி யாழ்ப்­பாணம் பல்­க­லைக்­க­ழக அணி வெற்­றி­பெற்று சம்­பியன் பட்­டத்தை தட்டிச் சென்­றது.

இந்தப் போட்டித் தொடரில் ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழகம் மற்றும் மொரட்­டுவைப் பல்­க­லைக்­க­ழகம் என்­பன முறையே 3ஆம் மற்றும் 4ஆவது இடங்­களைப் பிடித்­தன.

ஸ்ரீ ஜய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதி­ரான அரை­யி­றுதிப் போட்­டியில் யாழ்ப்­பாணம் பல்­க­லைக்­க­ழகம் 25–-24 என வெற்­றி­யீட்­டி­ய­தோடு மொரட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதி­ரான மற்­றைய அரை­யி­று­தியில் கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் 30–-29 புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­யீட்­டி­யது.

இறுதிப் போட்­டியில் யாழ். பெண்­க­ளுக்கு எதி­ராக கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் கடு­மை­யாகப் போரா­டி­ய­ போதும் யாழ். வீராங்­க­னைகள் இறு­தியில் 47–-42 என்ற புள்­ளி­களால் வெற்­றி யீட்டிக் ­கொண்­டனர். 

3ஆவது இடத்­துக் கான போட்டி ஒரு பக்க ஆட்­ட­மாக இருந்­தது. இதில் மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு எதிராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகம் 47–--27 புள்ளிகளால் இலகு வெற்றியீட்டியது.