அலுவலக புகையிரதம் உட்பட 50 க்கும் மேற்பட்ட ரயில்கள் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைவதில் இன்று தாமதம் ஏற்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கிடையில் புகையிரத சமிக்ஞை செயலிழந்ததன் காரணமாகவே இவ்வாறு ரயில்கள் கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடைய தாமதம் ஏற்பட்டதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.