(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பின் முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆறரை வயது மாணவன் ஒருவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை, அதற்கு உதவி புரிந்தமை ஆகிய குற்றங்களுக்காக, அதே பாடசாலையின் மாணவர்கள் இருவருக்கு தலா 10 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 

இற்றைக்கு 5 வருடங்களுக்கு முன்னர் பாடசாலைக்குள் வைத்து மாணவன் ஒருவருக்கு கடுமையான பாலியல் வன்கொடுமையை செய்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி குற்றவாளிகளான அதே பாடசாலையின் அப்போது மாணவர்களான பாடசாலை ற்கபி அணி வீரர்கள் இருவருக்கும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 2 இலட்சம் ரூபா நட்ட ஈட்டை வழங்குமாறும்  நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும், இரண்டு குற்றவாளிகளுக்கும் தலா 20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நீதிமன்றம் விதித்த அபாராதத்தை குற்றவாளிகள் செலுத்தத் தவறுவார்களாயின், அவர்களுக்கு மேலும் 43 மாதங்கள் கடூழிய சிரைத் தண்டனை விதிக்கபப்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்கடடியுள்ளார்.