இன்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சி தலைவர் கூட்டத்தில் பங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஆராய்வதற்கான செயற்குழு கூட்டம் இன்று மாலை அலரி மாளிகையில் இ்டம்பெற்றது.

இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளும் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் குறித்த கட்சியின் பங்காளி கட்சிகள் சார்பில் முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம்  மாத்திரமே கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.