(எம்.எப்.எம்.பஸீர்)

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவை நாளை ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு பொலிஸ் பிரிவில் ஆஜராகி வாக்கு மூலம் ஒன்றினை வழங்குமாறு குறித்த ஆணைக் குழு அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

நாளை காலை 9.30 மணிக்கு ஆணைக் குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராக இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

திறைசேறியின் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி  தேசிய வீடமைப்பு அதிகார சபைக்காக முறைசாரா நியமனங்களை  வழங்கியுள்ளதாக கூறப்படும்  சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு அமைய  இவ்வாறு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்கு மூலம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த விவகாரம் குறித்த முறைப்பாட்டுக்கு அமைய  தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர்  சாகர பலன்சூரியவுக்கும் ஆணைக் குழுவின் பொலி பிரிவில் ஆஜராகி வாக்கு மூலம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.