கண­வனின் தம்­பிக்கு திரு­மண ஏற்­பாடுகள் இடம்­பெற்­றதால் கவ­லை­ய­டைந்த மனைவி தற்­கொலை செய்து கொண்ட சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

தமி­ழ­கத்தின் வேலுார் மாவட்டம், திருப்பத்தூரையடுத்துள்ள மட்றப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விஜயன் என்பவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன், பவித்ரா ( 22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. 

இந்த தம்­ப­திக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

விஜயன், கர்நாடக மாநிலம், பெங்களூரில் பணியாற்றி வருகிறார். மாதத்துக்கு ஒருமுறை மட்டும் ஊருக்கு வந்து செல்வதை வழக்­க­மாக கொண்­டுள்­ளார். 

இதற்கிடையே பவித்ரா, விஜயனின் தம்பி கார்த்திக் இடையே கள்ளத்தொடர்பு ஏற்­பட்­டுள்­ள­து. அவர்கள் இரு­வரும் வீட்­டுக்குத் தெரி­யாமல் கள்­ளத்தொடர்பில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இந்நிலையில், கார்த்திக்கிற்கு திருமணம் செய்வதற்காக, பல்வேறு இடங்களில் பெண் பார்த்து வந்ததுள்­ள­னர். 

இதற்கு, பவித்ரா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அடிக்கடி அவர்கள் வீட்டில் பிரச்­சினை ஏற்­பட்­டுள்­ள­து. குடும்­பத்­தினர் பவித்­­ராவின் செயலை கண்­டித்து தீவி­ர­மாக கார்த்­திக்கிற்கு பெண் பார்­க்க ஆரம்பித்­துள்­ள­னர்.

இதனால் விரக்தியடைந்த பவித்ரா, வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இதையடுத்து, அரச வைத்­தி­ய­சா­லை­யில் அனுமதிக்கப்பட்டி பவித்ராவை பார்க்கச் சென்­ற கார்த்திக்கை உறவினர்கள் சரமாரியாக தாக்­கி­யுள்­ள­னர். 

படுகாயமடைந்த கார்த்திக், தர்மபுரி வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கிறார். பவித்ராவின் தந்தை பாலகிருஷ்ணனின் முறைப்பாட்டையடுத்து, திருப்பத்தூர் தாலுகா பொலி­ஸார் வழக்குப் பதிவு செய்து பவித்ராவின் மாமனார், மாமியார்   மற்றும் கணவன் விஜயன் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.