பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து இலங்கை அணி பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது உறுதியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் மொகான் சில்வா இதனை உறுதி செய்துள்ளார்.

பாக்கிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு கொடி பச்சைக்கொடியை காண்பித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் இடம்பெறவுள்ளது நானும் இலங்கை அணியுடன் பாக்கிஸ்தான் செல்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகநாடுகளின் தலைவர் ஒருவருக்கு வழங்கும் பாதுகாப்பை இலங்கை அணிக்கு வழங்குவதற்கு பாக்கிஸ்தான் முன்வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி பாக்கிஸ்தானில் ஆறுபோட்டிகளில் விளையாடவுள்ளது.