(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பல்கலைக்கழக கட்டமைப்பு முழுமையாக சீர்குலைந்து காணப்படுவதால் பல்கலை கல்விசார் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். 

மாணவர்களில் கல்வி நடவடிக்கைகள் முற்றாக முடங்கியுள்ளன. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம். கல்விசார் ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும் அவர் கூறினார்.

பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாக தீர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்திய சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.