இந்தியா உருவாக்கி வரும் விமானந்தாங்கி கப்பலான விக்ராந்தில் பொருத்தப்பட்டிருந்த மிக முக்கியமான டிஜிட்டல் சாதனம் மாயமான சம்பவம் இந்திய பாதுகாப்பு துறையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கேரளாவின் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விமானந்தாங்கி கப்பலில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் சாதனமே காணாமல் போயுள்ளது.

2009 முதல் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த கப்பலில் பொருத்தப்பட்டிருந்த நான்கு கணணிகள் மற்றும்  முக்கிய பொருட்கள் காணாமல்போயுள்ளனஎன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர்க்கப்பல்களின் வடிவமைப்பு விமானங்கள் எந்த பகுதிகளில் இறங்கவேண்டும் எங்கு ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கும் போன்ற விபரங்கள் அடங்கிய ஹார்ட்டிஸ்க்கள் காணாமல் போயுள்ளன.

இது இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட கப்பலிற்குள் சிசிடிவி கமராக்கள் இருக்கவில்லை கப்பல் தயாரிக்கப்படும் பகுதிக்கு வெளியிலேயே பாதுகாப்பு கமராக்கள் காணப்பட்டன எனவும் இதன் காரணமாக என்ன நடந்தது என்பது தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.