வவுனியாவில் பொலிசாரே போதை பொருள் வியாபாரத்தை ஊக்குவிப்பதாக தமக்கு பொதுமக்கள் தெரிவிப்பதாக வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா செபநேசராணி விசனம் தெரிவித்தார்.

வவுனியா நகரசபை அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த நகரசபை உறுப்பினர் சமந்தா செபநேசராணி மேற்படி தெரிவித்தார். 

குறித்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் எனக்கு பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளனர். அத்துடன் போதை பொருள் குற்றசாட்டில் கைது செய்யபட்டு சிறைகளில் அடைக்கபடுவோருக்கும் சிறைக்குள் வைத்து பொலிசாரால் போதை பொருட்கள் வழங்கப்படுவதாக எமக்கு தெரிவிக்கபடுகின்றது.

எனவே இது தொடர்பாக ஆராய்வதற்காக  பொலிஸ் திணைக்களம் மற்றும் நகரசபைக்கிடையில் கலந்துரையால் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.